செல்லம்மாள் - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: புதுமைபித்தன் காலம்: 1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு: புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர். சிறுகதை சுட்டி: https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/May/15/sellammal-puthumaippitthan-3415898.html பிற விமர்சனம்: ஜெயமோகன் ஷங்கர்ராமசுப்ரமணியன் கமல தேவி - சொல்வனம் விமர்சனம்: லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன் : இது ஓர் காதல் கதை ! ஆம். இதுதான் இதற்கான சரியான துவக்கமாக இருக்க முடியும். தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகன் என புதுமைப்ப...