ரயில்வே ஸ்தானம் - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: பாரதி கதையின் காலம்: 1920 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு: சி.சுப்ரமணிய பாரதியார் (பாரதி, பாரதியார்) (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921) தமிழின் நவீனக் கவிஞர்களில் முதன்மையானவர். பாரதியாரை நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என விமர்சகர்கள் கருதுகின்றனர். நவீனக் கவிதை, நவீன உரைநடை இலக்கியம், இதழியல் ஆகியவற்றில் முன்னோடி. தமிழிசை இயக்கத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவர். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறுகதை பற்றிய குறிப்பு: மாகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில் ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்...