இடுகைகள்

செல்லம்மாள் - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்: புதுமைபித்தன் காலம்: 1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:  https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/May/15/sellammal-puthumaippitthan-3415898.html பிற விமர்சனம்: ஜெயமோகன் ஷங்கர்ராமசுப்ரமணியன்   கமல தேவி - சொல்வனம் விமர்சனம்:      லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன் : இது ஓர் காதல் கதை ! ஆம். இதுதான் இதற்கான சரியான துவக்கமாக இருக்க முடியும். தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகன் என புதுமைப்ப...

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்: புதுமைபித்தன் காலம்: 1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                     புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:  https://www.sirukathaigal.com/கயிற்றரவு/ விமர்சனம்: தமிழ் விக்கி   வல்லமை நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:        கா சிவா:    கதையின் தலைப்பே கதையின் பொருண்மையை சுட்டிவிடுகிறது. அதன் பொருள் தெரிந்த வாசகன் மனதளவில் தயாராகவே கதைக்குள் நுழைய முடியும். இதைத்தான் கூறப் போகிறது என எதிர்பார்த்து உள்நுழையும் வாசகனையும் ஆ...

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - சிறுகதை விமர்சனம்

படம்
எழுத்தாளர்:  புதுமைபித்தன் காலம்: கலைமகள், அக்டோபர், நவம்பர் 1943 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                          புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:  https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_5872.html விமர்சனம்:                          வல்லினம்                          திண்ணை நந்தி இ...

ரயில்வே ஸ்தானம் - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்: பாரதி கதையின் காலம்: 1920 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                           சி.சுப்ரமணிய பாரதியார் (பாரதி, பாரதியார்) (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921) தமிழின் நவீனக் கவிஞர்களில் முதன்மையானவர். பாரதியாரை நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என விமர்சகர்கள் கருதுகின்றனர். நவீனக் கவிதை, நவீன உரைநடை இலக்கியம், இதழியல் ஆகியவற்றில் முன்னோடி. தமிழிசை இயக்கத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவர். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறுகதை பற்றிய குறிப்பு:                          மாகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில்  ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்...

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்

படம்
எழுத்தாளர்: வ.வே.சு. ஐயர் காலம்:  19XX எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                        சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழின் முன்னோடி இதழாளருமான வ.வே.சு.ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை  அரசமரம்’  சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை (1915) என்று கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு முன்னமே மகாகவி பாரதி தமிழில் சிறுகதை எழுதி இருக்கிறார். அதேபோல, இக்கதை ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய  ‘கடேர் கதா’ என்ற சிறுகதையின் தழுவல் என்று கூறுவோரும் உள்ளனர். குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்வதாக அமைகிறது இச்சிறுகதை. ‌ “பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம்” என்ற  நீதி போதனையுடன் இக்கதை முடிகிறது.  அக்கால சுதந்திரப் போராளிகளின் சமூக சீர்திருத்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இக்கதை இருப்பதை கவனிக்கலாம். இச்சிறுகதை  முதலில்...

புலிக்கட்டம் சிறுகதை - எஸ் ராமகிருஷ்ணன் - வாசிப்பு

புலிக்கட்டம் சிறுகதை வாசிப்பு அனுபவம் - க சரத்குமார் புலிக்கட்டம் சிறுகதையின் துவக்கத்தில் களவாட சென்று ஓடு உடைந்து வீட்டுக்குள் விழும் திருடனை ஊர்க்காரர்கள் சேர்ந்து புங்க மரத்தில் கட்டி வைக்கின்றனர். அன்று இரவு முழுவதும் கொட்டும் பனியில் பசி மயக்கத்தில் கிறங்கி நிற்கும் அவனது எண்ண ஓட்டங்களும், கிராம வாசிகளின் முன்பே ஒருமுறை திருடனை பிடித்து அவனை கட்டி வைத்ததால் இறந்து போன உறுத்தலும் சந்திக்கும் புள்ளி தான் கதையாகிறது. கன்னம் ஒட்டிய ஒடிசலான இந்த திருடனை, திருடன் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அப்படி உருக்குலைந்து இருப்பவன் எதையாவது திருடி வீட்டிற்கு கொண்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் திருட சென்று பிடிபடுகிறான். அவனது குழந்தையில்லா மனைவியின் நினைவுகளும், அவளது பெட்டியில் இருக்கும் வாடிய தாழம்பூவின் நினைவுகளும் உருவாகிறது. பின்பு சிறு வயதில் அவனது அப்பாவினோடு கீதாரிகள் வரும் சமயங்களில் அவர்களோடு சென்று தங்கிய நினைவுகளும், அவர்களில் ஒருவனோடு அப்பா ஆடிய ஆடு புலி ஆட்டமும் நினைவிற்கு வருகிறது. அந்த ஆடு புலி ஆட்டத்தில் வரிசையாக புலியை நகர விடாமல் தடுத்து நிறுத்தப்படுவதால் கோபமுறு...

மதினிமார்களின் கதை - சிறுகதை குறிப்பு - கோணங்கி

மதினிமார்களின் கதை 8- டிசம்பர் அன்று குழுமத்தில் வாசிக்கப்பட்டது. அதன் மகேந்திரனின் வாசக குறிப்பு.  ஜெயமோகனுடனான தொலைபேசி உரையாடலில் கீழ்வருமாறு கோணங்கி சொல்கிறார். ”டேய் நான் என்ன சொல்றேன்னா நாமள்லாம் மெட்றாஸுக்கு வந்தா மெட்ராஸ் நம்மள வேடிக்கை பாக்கணும். நாம ஊருக்குப்போனா நம்மள ஊரு வேடிக்கை பாக்கிற மாதிரி ஆயிடக்கூடாது. நம்ம உப்பு அங்க இருக்கு. அதுமேல நாம இருந்திட்டிருக்கணும்." இன்னொரு உரையாடலில், ”சரிதாண்டா நீ தப்பிச்சுக்குவே.. நீ எப்பவுமே ஒரு வெரதம் புடிக்கிற மனநிலை உள்ள ஆளு. தம்பி ராமகிருஷ்ணன்தான் மாட்டிக்கிட்டானோன்னு சந்தேகமா இருக்கு” கோணங்கிக்கு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு பெரும் அளவு மாற்றமாகக்கூடிய தலைமுறையை சார்ந்தவர். உண்மையில் அப்படி நகர்ந்தாலும் தன்னுடைய மண் என்பது கிராமம்தான் என நினைக்ககூடிய தலைமுறையைச் சார்ந்தவர்.  இந்த நொடியில் இருக்கும் நூறு கிராம மக்கள், அங்கிருக்கும் நாய், மரம், ஏரி என எல்லாம் சேர்ந்துதான் நமக்கு ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது. ஒரு மரம் இல்லாமல் போனாலும் நமக்கு அந்த சரியான சித்திரம் இல்லாமல் போகும் ஆனால் நம்முடைய கவனக்குறைவால் அதனை நாம் வி...

விஷக்கிணறு குறுநாவல்- சுனில் கிருஷ்ணன்- வாசிப்பு

விஷக் கிணறு குறு நாவல் மீதான வாசிப்பு. நான்கு பகுதிகளை கொண்ட குறு நாவலின் ஒவ்வொரு பகுதியும் மிக கூர்ந்த வாசிப்பை கோருவது எண்ணற்ற வாசிப்பு சாத்தியங்களை வாசகருக்கு அளிப்பதாக இருக்கும் என தோன்றுகிறது. இதன் முதல் பகுதியில் வரும் மனைவியின் தற்கொலையால் மனம் வருந்தும் முதியவர். மனைவியின் தற்கொலையும் அதன் மீதான வழக்கும், மனைவியின் மெளனமும் மிகவும் பாதித்து அவரது மனைவியிடம் மன்னிப்பை கோரும் அவரது ஆத்மா. அவரது சந்தோஷ தருணங்களை தன் மரணத்துடன் எடுத்து சென்று விட்டது போல் அவரை விடாமல் துரத்தும் பழைய துர் நிகழ்வுகளின் நினைவுகள், அவரை ஆழ் கிணற்றில் விழ செய்து கொண்டிருக்கிறது. மெலாவாத்தி மலையில் வரும் தண்டனைக் கிணறு படிமமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் பகுதி கதைக்குள் உள்ள உள்கதையில் வரும் குரங்கு கூட்டத்தினை கிணற்றில் விஷம் வைத்து கொள்ளும் நிகழ்வு, ஒரு மரபான இந்திய மனம் எவ்வாறு இந்த மனித மனதின் கொடூரத்தை எதிர் கொள்கிறது என்று சொல்வதாக புரிந்து கொண்டேன். அதன் வழியாக அவரும் அவரது சந்ததிகளும் ஒரு விடுதலையை அடைவார்கள் என்றே தோன்றுகிறது. இரண்டாவது பகுதியில் ஒரு தொன்மக் கதை சொல்லப்படுகிறது. இறையின் தீங்கனாவை ...

சாபவிமோசனம் - சிறுகதைப் பற்றி வாசகனின் குறிப்பு - புதுமைப்பித்தன்

 சாபவிமோசனம் கதை 24 - நவம்பர் அன்று குழுமத்தில் விவாதிக்கப்பட்டது. அதைப் பற்றிய மகேந்திரனின் குறிப்பு. வரலாறு நெடுகிலும் ஆணாதிக்கத்தின் உச்ச அழுத்தத்துக்கு பெண்கள் கொள்ளும் இரண்டு நேரெதிரெதிர் வெளிப்பாடுகள் hysteria (வெறி) மற்றும் meloncholia ( முருகயர்தல்) . இவை இரண்டும் பெண்மையின் வெளிப்பாடுகள், ஆனால் அவற்றில் வெளிப்படும் அவர்களே அறியாத ஆற்றல் என்பது ஒன்றே - கொட்டுக்காளி திரைப்பட விமர்சனம் குறித்து எழுத்தாளர் அஜிதனின் விமர்சனத்தின் ஒரு பகுதி.  செய்யாத தவறுக்காக சீதை அக்னிப்பிரவேசம் செய்தால் எனத் தெரிந்ததும் ஆவேசம் அடைகிறாள் அகலிகை. அவளது சீற்றம் கண்ணகி போல எனச் சொல்கிறார் புதுமைப்பித்தன். அதுவே பிறகு மாறி வேறோன்றாக வெளிப்படுகிறது. முனிவர் ஒரு குழந்தை இருந்தால் எல்லாம் சரியாகவிடுமென நினைத்து தன் குடிலுக்குள் வந்து தழுவிக்கொள்ளும் கணவனைப் பார்த்து இந்திரனாக இருந்தால் என அவள் பயப்படுகிறாள். இந்திர நாடம் என எண்ணுகிறாள். கணவனாகவும் இருக்கலாம் இந்திரனாகவும் இருக்கலாம். எப்படி இருந்தால் என்ன? இவர்கள் (ஆண்கள்) என்ன சொல்கிறார்களோ அதுதானே சரி என்பதைப் போல அவளது எண்ணம் இருக்கும். தனக்க...