மாறுதல் - சிறுகதை விமர்சனம்
எழுத்தாளர்: மெளனி காலம்: 1937 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு: மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். சிறுகதை சுட்டி: https://archive.org/details/orr-11355_Maaruthal/mode/2up பிற விமர்சனம்: https://vallinam.com.my/version2/?p=9807 நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு: கோ வீரராகவன்: மனைவியின் மரணத்தில் தொடங்குகிறது மாறுதல் என்னும் சிறுகதை. மனைவியின் இறப்பிற்கு பிறகு நடக்கும் நிகழ்வுகளினூடாக அந்த மரணத்தால் பாதிக்கப்படும் கணவனின் அகத்தை விளக்குவதாக கதை செல்கிறது. புற...